பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை இரு வாரங்களுக்குள் வௌியிட நடவடிக்கை



கடந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வௌியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஆணைக்குழுவின் பிரதி தலைவர், பேராசியர் சந்தன உடவத்த குறிப்பிட்டுள்ளார்.

இம் முறை 44,000 மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு இணைவதற்காக இம்முறை ஒரு இலட்சத்து ஐயாயிரத்திற்கும் அதிக விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதி தலைவர், பேராசியர் சந்தன உடவத்த குறிப்பிட்டுள்ளார்.