ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைஊடகவியலாளர்களுக்கும் வெகுசன ஊடகங்களுக்கும் ஏற்புடைய சட்டத் திருத்தங்கள், கொள்கைகள் மற்றும் புதிய ஒழுக்க விதிகளை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் துறை ஊடகங்கள், சந்தைப்படுத்தல், கல்வி ரீதியான, சட்டங்கள், நிர்வாகம் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் அனுபவம் வாய்ந்த நபர்களின் பிரதிநிதித்துவத்துடனான குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.