ஒமிக்ரோன் மாறுபாட்டில் 32 பிறழ்வுகள்

ஒமிக்ரோன் மாறுபாட்டில் சுமார் 32 பிறழ்வுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் நுண்ணுயிரியல் மருத்துவர் ஜூட் ஜயமஹா தெரிவித்தார்.

ஒமிக்ரோன் மாறுபாடு தடுப்பூசியை எதிர்க்கும் என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை என்றும் அவர் கூறினார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“ஒமிக்ரோன் மாறுபாட்டில் சுமார் 32 பிறழ்வுகள் பதிவாகியுள்ளன. டெல்டா பிறழ்வில் 23 மற்றும் அல்பா பிறழ்வில் 8. இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்பட வில்லை. இந்த வகை ஒமிக்ரோன் தடுப்பூசிகளை எதிர்க்கும் என்பதற்கு தற்போது தெளிவான ஆதாரம் இல்லை” என்றும் அவர் கூறினார்.