கஞ்சா வளர்ப்புக்கான சட்டத்தை வகுக்க அனுமதி



கஞ்சாவை ஏற்றுமதி செய்கையாக, செய்கை செய்வதற்கு தேவையான சட்டத்தை உடனடியாக வகுத்து, அதனை சட்டமாக்குமாறு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி கிடைத்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்றைய சபை ஒத்தி வைப்பு பிரேரணை மீதான விவாதத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே முன்வைத்த யோசனையை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார வழிமொழிந்தார்.

உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் கஞ்சாவை செய்கையாக செய்து, பாரிய இலாபத்தை ஈட்டி வருவதாக டயானா கமகே தெரிவித்துள்ளார்.

டயானா கமகேயின் யோசனைக்கு பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளனர்.