வெற்றிலை எச்சிலை வீதியில் துப்புவோருக்கு எதிராக இன்று முதல் சட்டம் கடுமையாகிறது

 


இன்று முதல் பொது இடங்களிலும், நெடுஞ்சாலை களிலும் வெற்றிலை எச்சிலை துப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

பொலிஸ் பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் ராஜபக்ஷ பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொவிட் வைரஸ் பரவல் மற்றும் வீதிகளில் எச்சில் துப்புவதால் ஏற்படும் கடுமையான மாசடைதல் காரணமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வெற்றிலை எச்சிலை துப்புவோரைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.