தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்படாது-அரசாங்கம்

 


தமிழ்,சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்படாது என அரசாங்கம் உறுதியளிக்கிறது.

‘ஓஷன் அட்டம்’ கப்பலில் 35,300 மெட்ரிக் தொன் பெற்றோல் ஏற்றப்பட்டதாகவும், மற்றுமொரு கப்பல் 21,600 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 22,190 மெட்ரிக் தொன் விமான எரிபொருளையும் ஏற்றிக்கொண்டு நாளை வரவுள்ளதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் 37,300 மெட்ரிக் தொன் டீசல் நாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை, இந்திய கடன் திட்டத்தின் ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றுமதி எதிர்வரும் 2ஆம் திகதி எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நிலைமையை நிர்வகித்து தேவையான எரிபொருள் இருப்புக்களை இறக்குமதி செய்து வருவதாகவும், தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி என்பது அனைவரும் அறிந்ததே என அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், தற்போது அதிகளவு எரிபொருள் கையிருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், எனினும் எரிபொருள் நெருக்கடிக்கு பொதுமக்கள் அரசாங்கத்தை தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.