ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் - மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் கைது




ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

22 பேரை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் நேற்றைய தினம் பணிப்புரை விடுத்திருந்தார்.

அதனடிப்படையில் இதற்கு முன்னர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது