பிரதி சபாநாயகரின் நியமனம் தொடர்பில் பிரதமரின் கருத்து


அடுத்த பிரதி சபாநாயகராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று ( சனிக்கிழமை ) பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் பிரதமர் இதனைத் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இந்த வாய்ப்பை வழங்குமாறு கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார் .