ஜஸ் ரீல் கிட்ஸ் காடன் பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் கண்காட்சி - 2022

(சித்தா)

ஜஸ் ரீல் கிட்ஸ் காடன் பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் கண்காட்சி பாலர் பாடசாலையின் அதிபர் திருமதி பெனிற்றா நிலோஷினி ஸ்ரான்லி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு வலய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.முத்துராஜா புவிராஜா அவர்களும் மண்முனை வடக்குப் பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.திருச்செல்வம் மேகராஜா அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

இங்கு பிள்ளைகளின் ஆற்றல் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் அவர்களினால் தயாரிக்கப்பட்ட பல்வேறுபட்ட ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களது ஆக்கங்களையும் காணக்கூடியதாக இருந்தது. இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பெரும்பாலான பொருட்கள் கழிவுப் பொருட்களைக் கொண்டு ஆக்கப்பட்டவையாக இருந்தமை அதன் சிறப்பம்சமாகும்.

குறித்த கண்காட்சியை சிறப்பான முறையில் பெற்றோர்களின் பூரண ஒத்துழைப்புடன்  ஒழுங்கமைத்து செயற்படுத்திய முன்பள்ளி அதிபர் ஆசிரியர்களுக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமையும்  குறிப்பிடத்தக்கதாகும்.