இந்தியாவின் நம்பகமான நண்பர் என்பதால் , இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவோம் - இந்தியா உறுதி !

 

இந்தியாவின் நம்பகமான நண்பர் மற்றும் நேர்மையான பங்காளி நாடு என்ற அடிப்படையில் இந்தியா - இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.

கம்போடியாவில் இடம்பெற்று வரும் ஆசியான் மற்றும் இந்திய அமைச்சர் மட்ட மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதன்போது இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜெய்சங்கர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.