மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது பாடசாலை தின நடைபவனி

(வரதன் )

தேசிய ரீதியில் சாதனை படைத்த புனித மிக்கேல் கல்லூரியின் 150வது பாடசாலை தினத்தை முன்னிட்டு நடைபவனி ஓன்று இன்று காலை நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நடைபவனி பாடசாலை வளாகத்தில் இருந்து ஆரம்பமாகியது. பாடசாலை மாணவர்களுடன் கூட்டம்  நடைபெற்று நடைபவனியில் ஒழுக்க,விழுமியங்களை பேணும்படி அறிவுறுத்தப்பட்டனர். அத்துடன் பாடசாலைக்காக சேவையாற்றிய சற்குணநாயகம் அடிகளாரும் பாடசாலை சமுகத்தால் கெளரவிக்கப்பட்டார். 

காலை 7  மணியளவில் ஆரம்பமாசிய இவ் நடைபவனியில் பாடசாலை பாண்டு வாத்திய குழு சாரணர்கள் பாடசாலை மாணவர்கள் பழைய மாணவர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர். இந்நடைபவனியில் போதைப்பொருள் ஒழிப்பு சம்மந்தமாகவும் சுற்றாடல் பாதுகாப்பு போன்றவற்றை பற்றி விழிப்புணர்வூட்டும் பதாதைகள் மாணவர்களால் கொண்டு செல்லப்பட்டது.அத்துடன் பாடசாலையின் வலைப்பந்தாட்ட குழுவினர் மற்றும் பாடசாலை விளையாட்டு குழு ஆகியோர் கலந்துகொண்டனர். கலைகலாசார நிகழ்வுகளுடனும் மாணவர்களின் ஆடல் பாடல்களுடன் இந் நடைபவனி நடைபெற்றது.

பெருமளவான மாணவர்களுடன் நடைபெற்ற் இந் நடைபவனியானது பாடசாலையிலிருந்து மட்டு நகரின் பிரதான வீதிகள் ஊடாக சென்று பின்னர் பாடசாலையை மீண்டும் வந்தடைந்தது. இம்முறை பாடசாலை தேசிய ரீதியில் சாதனை படைத்ததாலும் பாடசாலையின் 150வது பாடசாலை தினம் என்பதால் பாடசாலை மாணவர்கள் பழைய மாணவர்கள் அதிகம் கலந்துகொண்டனர். அதிகளாவான மாணவர்கள் கலந்து கொண்டமையால் வீதியீல் வாகன நெருக்கடி ஏற்பட்டு வீதிகள் சில நேரம் ஸ்தம்பித்து காணப்பட்டமையும் குறிப்பிடதக்கது