அரச பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !ஸ்தாபனச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளைப் பின்பற்றாமல் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்தும் அரச பணியாளர்கள் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக உள்துறை அமைச்சின் செயலாளரால் இன்று இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்தாபனக் குறியீட்டின் பிரிவுகளின் 6 மற்றும் 7ஆம் அத்தியாயங்களின் விதிகளைப் பின்பற்றாமல் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடும் பொது அதிகாரிகள் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.