சமூக ஊடகங்களில் துஷ்பிரயோகம் : கடந்த 10 மாதங்களில் 12,000 வழக்குகள் பதிவு !



சமூக ஊடகங்களில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் கடந்த 10 மாதங்களில் 12,000 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

பெற்றோர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ஆசிரியர்களும் இது போன்ற சம்பவங்கள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு தகவல் தொழில்நுட்பத் துறையைப் பயன்படுத்தி டிஜிட்டல் கல்விக் கொள்கை தயாரிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் நேற்று (01) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.