# .

19 வயதுடைய இளைஞன் தூக்கிட்டு தற்கொலை !


(மண்டூர் ஷமி)

கொக்கட்டி சோலை போலீஸ் பிரிவு உட்பட்ட மாவடி முன்மாதிரி பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று (22) இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

பத்தரைக் குளம் மாவடி முன்மாதிரி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய நடராஜா சதுஸன் என்பவரே இவ்வாறே தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்

சம்பவ தினத்திற்கு முதல் நாள் தனது வீட்டாருடன் உரையாடிக் கொண்டிருந்த பின்னர் தனது படுக்கை அறைக்கு சென்றவர் அதிகாலை எவ்விதமான சத்தங்களும் இன்றி அவரின் அறை பூட்டப்பட்டு இருந்ததாகவும் பின்னர் வீட்டார் வீட்டின் ஜன்னலை உடைத்து உட்சென்ற போது தனக்குத் தானே தூக்கிட்ட நிலையில் காணப்பட்டதாகவும் பின்னர் தூக்கில் இருந்து மீட்டெடுத்து பார்த்தபோது உயிரிழந்து காணப்பட்டதாகவும் பொலிஸார் மற்றும் மரணவிசாரணை அதிகாரியின் ஆரம்ப கட்டம் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவான் அவர்களின் உத்தரவுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்று மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்;ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனை பின்னர் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்