மாவெற்குடா விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கற்றல் வளமாக்கி வழங்கள்

(சித்தா)

பட்டிருப்பு கல்வி வலயத்தின் போரதீவுப்பற்றுக் கோட்டத்தில் ஆரம்ப தரங்களைக் கொண்ட பாடசாலை மாவெற்குடா விக்னேஸ்வரா வித்தியாலயமாகும். இப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தையுடையவர்களாகும். வருமானம் குறைவு காரணமாக மாணவர்கள் கல்வி கற்பதற்கான உபகரணங்களைக் கொள்வனது செய்வது என்பது மிகவும் கடினமானதாக உள்ளது. இந் நிலைமை கல்வியினை இம் மாணவர்கள் தொடர்வதற்குத் தடையாகக் காணப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு தேற்றாத்தீவினைச் சேர்ந்த கு.கிருஸ்ணராசா என்பவர் தரம் 6 கற்பதற்கு வேறோர் பாடசாலைக்குச் செல்லும் மாணவருக்குத் துவிச்சக்கர வண்டி ஒன்றினையும், ஏனைய மாணவர்களுக்கு கற்றல் வளமாக்கிகளையும் அதிபரிடம் கையளித்திருந்தார். இக் கற்றல் வளமாக்கிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு அதிபர் ப. பிரகலாதன் தலைமையில் இன்று பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் த.அருள்ராசா, உதவிக் கல்விப் பணிப்பாளர் பா.வரதராஜன், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.