(நடனம்)

மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் வருடாந்த இல்லவிளையாட்டுப்போட்டி செவ்வாய்க்கிழமை ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்றபோது அதில் உரையாற்றுகையில் அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார் இந்நிகழ்வில் எம்.ஐ. சேகு அலி மட்டக்கப்ப தேசியக்கல்விக்கல்லூரி விரிவுரையாளர் இ.மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் விளையாட்டுச் செயற்பாடுகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவதால் பலவிதமான உளவியல் ஆனுகூலங்களைப் பெறக்கூடியதாக இருக்கும் உடற்பயிற்சிகள் எப்போதும் மனதுக்கு உறுதியாக இருப்பதுடன் உடலையும் ஆண்மாவையும் திடப்படுத்தும் அத்துடன் விiயாட்டில் நிலவும் குழு உணர்வு மூலம் நேரத்திலான கற்றல் அர்ப்பணிப்பு தலைமைத்துவம்போன்ற உள்ளார்ந்த திறன்கள் வெளிப்படுத்தப்படுகின்றன அதிகமான விளையாட்டு வீரர்கள் கல்விச்செயற்பாட்டிலும் சாதனை படைத்தவர்களாக வரலாற்றில் காணமுடிகின்றது
விளையாட்டு சுய கணிப்பை ஏற்படுத்துவதுடன் உயர் இரத்த அழுத்தம் மன அழுத்தம் என்பவற்றை நீக்க உதவுகின்றது ஒரு சமநிiயான ஆளுமையை ஆசிரியர்கள் தம்மிடத்தில் உருவாக்குவதற்கு முன் கூட்டியே திட்டமிடப்பட்ட கலைத்திட்டத்திற்கு ஏற்ப வகுப்பறைக்குள் மட்டும் முடங்கிக்கிடந்த பரீட்சையை மட்டும் நோக்கி செயற்படுவதை குறைத்து பல்வகைப்பட்ட கற்றல் இடபாடு உடைய பிள்ளைகளுக்கும் கல்வி செயற்பாடுகளிலும் ஆர்வத்தையும் விருப்பத்தையும் ஏறபடுத்தி அவர்கள் மகிழ்சியுடையவர்களாக மாற்ற முடியும்
இன்று பல்வேறு கல்விச்சிந்தனையாளர்களும் பாடசாலைகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் தோல்வி அடைந்துவிட்டதாகவும் அதிபர்களும் ஆசிரியர்களும் பிரச்சினைக்குரியவர்களாக மாறிவிட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது .
பாடசாலை வெறும் மண்ணும் சாந்தும் கல்லும் கொண்டு கட்டப்பட்ட இடம் அல்ல அது உயிரும் உயிர்ப்பும் உள் மனிதர்களை உருவாக்கும் இடமாகும் அதிபர்களும் ஆசிரியர்களும் உயிர்ப்பாகவும் துடிப்பாகவும் இயங்காவிட்hடால் பாடசாலை மரணித்துவிடும் என அவர் தெரிவித்தார்