குழந்தை வளர்ச்சியில் ஆரம்பக்கல்வியின் அவசியம்



 ஒரு கட்டடத்தில்  உறுதி மிக்க அமைப்பு அமைக்கப்பட்டுள்ள அடித்தளத்தினைக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது. அது போல மனிதனின் ஆற்றல்கலை வெளிக் கொண்டு வருவது அவன் பெறுகின்ற ஆரம்ப கல்வியைப் பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகின்றது.

அந்த வகையில் இன்று ஆரம்ப கல்வி பிள்ளைகளின் அடிப்படை உரிமையாக வலியுறுத்தப்படுகின்றது. ஆரம்ப கல்வியின் மீதான முதலீடு மனித பலத்தை உருவாக்க செய்யப்படுவதென்பது அண்மைய கால கருத்தாகவும் காணப்படுகிறது.

இதனுள் ஆரம்ப கல்வியானது தனி ஒருவருடைய பாதுகாப்பான எதிர்காலம், நல்வாழ்வு, தன்னம்பிக்கையுடையதான வாழ்க்கை என்பவற்றுக்கு துணை செய்யும் என்பதனை விஞ்ஞான  ரீதியான பலவேறு ஆய்வுகளும் இன்று வெளிப்படுத்தி   உள்ளன. அந்த வகையில் ஆரம்ப கல்வியில் பெற்றோரின் வகிபங்கு புதியதொரு விடயமல்ல கல்விக்கும் குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு பிள்ளைகளின் உள விருத்திக்கும் உடல் விருத்திக்கும் வாழ்க்கை பழக்கவழக்கங்களுக்கும் சமூக ஊட்டச்சத்துக்கான கல்விக்கும் கலாச்சாரம் பறறிய அடிப்படை விளக்கங்களையும் சமயம் மற்றும் ஒழுக்க கல்விகளையும் மொழியறிவு முறையில் கல்வி மூலம் பெறப்படும் தொழில்களையும் அறிவு போன்றவற்றினை வழங்குவதில் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கின்னர். குறிப்பாக கூறுவதாயின் சமூக மயாக்கத்திற்கு தேவையான அடிப்படைகளை வழங்குவதில் பெற்றோர் முன் நிற்கின்றனர்.

எந்த  குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவராவதும் தீயவராவதும் அது தாயின் வளர்ப்பினிலே என்பதற்கு இணங்க ஆரம்பத்தில் இருந்தே சீரான பாதையில் கற்றலை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு பிள்ளைக்கும் வழிக்காட்டுபவர்கள் பெற்றோர்கள் ஆவார். அவ்வாறு ஆக்க பூர்வமாக பெற்றோர்கள் பங்களிப்பினை வழங்குகின்ற போது இன்றைய புதிய கல்வி சீர்திருத்தத்திற்கமைய கல்வியின் குறிக்கோளுக்கிணங்க இன்றைய சிறார்களே நாளைய நாட்டின் நட்பிரைஜகளாக  ஒவ்வொரு பாடசாலைகளாலும் உருவாக்க முடியும் இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து எண்பதற்கிணங்க பசுமையான மாணவர் பருவத்தில் ஆரம்ப நெறியில் பெற்றோரின் பங்களிப்பு என்பது அத்தியவசியமானதொன்றாகவுள்ளது.

எதிர்காலத்தில் பிள்ளைகள் படித்து முன்னேற வேண்டும் என்பது பெற்றோரின் ஆசையாகும். இவ்வாறானதொரு முன்னேற்றத்திற்கு ஆரம்ப கல்வி என்பது அத்திவாரமாக அமைகின்றது. அதனை ஒழுங்கான சீரான முறையில் அமைத்துக் கொடுக்கும் பொறுப்புக்களை பெற்றோர்கள் அறிந்து கொளள்ள வேண்டும். ஆரம்ப கல்வி பயிலும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பி வைப்பதுடன் பெற்றோரின் கடமைகள் முடிந்து விடவில்லை பாடசாலைகளில் தமது பிள்ளைகள் யாருடன் பழகுகின்றார்கள் எவ்வாறான நண்பர்களை தேடிக் கொள்கின்றார்கள் எவ்வாறு கல்வி கற்கின்றார்கள் போன்ற விடயங்களை ஆராய்ந்து அறிவதுடன் உரிய ஆசிரியருடன் சுமுகமான உறவினை வைத்திருத்தல் வேண்டும் என்ற ரீதியில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் மீது கவனத்தை செலுத்த வேண்டும் அப்போதுதான் ஆரம்ப கல்வியை பிள்ளைகள் பயிலும் போது அதனை சிறப்பானதாக்கி தங்களை வழப்படுத்தி கொள்ள முடியும்.

 காரண கற்றல் எனபது குடும்பவாழ்வில் ஒரு பகுதியே மனித குடும்பத்தில் குடும்பம் பெரும் பங்கு வகிக்கின்றது என்பதால் பிள்ளைகளுக்கு ஆரம்ப கல்வியில் பெற்றோரின் பங்கு மிக அவசியமாகும். ஆளுமை விருத்திக்கு பொருத்தமான காலமாக கொள்ளப்படுகின்ற ஆரம்ப கல்வி பொருத்தமான அனுபவங்களும் சந்தர்ப்பங்களும் கிடைக்குமிடத்து ஒரு பிள்ளை விரும்பத்தக்க பழக்கவழக்கங்கள் சிறந்த மனப்பாங்கு விழுமியங்கள் திறன்கள் சுய சிந்தனை திறனாய்வு சமூக இசைவாக்கம் என்பவற்றை பெற்று எதிர்கால நடவடிக்கைகளுக்கான அடிப்படைகளை பெற்றுக்கொள்கின்றது என்பது எடுத்துக்காட்டப்படுவதாகும். ஆரம்ப கல்வியில் பெற்றோரின் பங்கு இன்றியமையாததாகும்.

குழந்தைகளை பொறுத்தவரை மூளை வளர்ச்சி என்பது ஆறு வயதிற்குள் ஏறத்தாழ 95 சதவீதம் நிறைவடைகின்றது. எனவே அந்த வயதிற்குள் நாம் குழந்தைகளுக்கு அனைத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு ஆரம்ப கல்வி அவசியம் என்பது பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விளங்கப்பட வேண்டும். அந்த வயதில் தான் குழந்தைகள் அதிகமான கேள்விளை கேட்கும் திறனும் சிறு சிறு பொருட்களை கொண்டு செயற்பாடுகளை செய்யும் திறனும் சிறந்த பேச்சுத்திறனும் உருவாகின்றது. இதன் மூலம் முன்பள்ளிப் பருவத்தில் ஒரு குழந்தையின் அறிவு திறன் மனப்பாங்கு என்பன சிறந்த முறையில் வளர்ச்சி பெறுகின்றது.

ஒரு குழந்தைக்கு எத்தகைய சாதகமான சுற்றுப்புற சூழல் அமைந்தாலும் அக் குழந்தை குறிப்பிட்ட முதிர்ச்சி நிலையை அடையும் வரை அதனால் கற்க இயலாது. முறையான நல்ல வளர்ச்சி ஏற்படுவதற்கு நல்ல சாதகமான சூழ்நிலை அத்தியவசியமானதொன்றாகின்றது. நல்ல சூழ்நிலை என்பது ஒரு குழந்தைக்கு தூண்டு கோலகாவும் நல்ல உறுதியான அனுபவங்களை கொடுக்க கூடியதாகவும் இருக்கின்றது. எத்தகைய சூழலில் குழந்தைக்கு சலிப்பினை போக்கி தன்னகத்தே மறைந்துள்ள திறமைகளையும் தனித்தன்மைகளையும் விருப்பங்களையும் வெளிப்படுத்த உதவுகின்றது. குழந்தை வளர்ச்சி முனனேற்றம் இரண்டும் ஒரு தொடர்ச்சியான நிகழ்வாக இருப்பதால் கற்றலும் முதிர்ச்சியும் அதனைப் பொறுத்தே அமைகின்றது. வெறுமையான சூழ்நிலையில் முறையான கற்றல் நிகழாது. ஏனெனில் அதற்கு தூண்டுதலான சூழ்நிலையில் இனிமையான அனுபவங்களும் இருந்தால் தான் குழந்தை உலகியலை பற்றி ஆராய முடியும்.

எல்லாக் குழந்தைகளும் கற்பதற்கு உரிமையுண்டு ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை முறையான வழியில் அடைய உதவுதல் வேண்டும். குழந்தைகளின் ஆரம்ப கால பருவங்களைப் பற்றி கவ்வியாளர்கள் அதிக் அக்கறை செலுத்தினார்கள். குழந்தையின் வளர்ச்சிய்ல் முதல் ஆறு வருடங்கள் முத்திரை பதிக்க கூடியதாக உள்ளது. ஏனெனில் இந்த பருவத்தில் தான் அடிப்படை நீதி உடல் சமூக மனவெழுச்சி மொழி மற்றும் கலை வளர்ச்சிக்கு வித்திடப்படுகின்றது. குழந்தைகளுக்கு ஏற்படும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை கீழ்வரும் முறையில் விளக்கலாம்.
1. உடல் இயக்க வளர்ச்சி
2. குழந்தையின் முழுமையான வளர்ச்சி
3. கலை வளர்ச்சி
இந்நிலையானது குழந்தைப் பருவத்தில் மிக முக்கியமானதொன்றாகவுள்ளது. இப்பருவத்தில்தான் குழந்தையின் எண்ணங்கள் ஆர்வங்கள் நேயங்கள் போன்றவை வளர்ச்சியடைகின்றது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின்பாலட மிகுந்த அன்னு கொண்டிருந்தாலும் தங்கள் குழந்தைகளை வழிநடத்தி செல்லவும் பயிற்சி அழிக்கவும் திறமையுடையவர்களாக இருபடபதில்லை
அதைப்பற்றியே அறிவுடையவர்களும் வறுமையால் வாடுவதாலும் அதன் நவீன கால வாழ்க்கை முறையாலும் நேரமின்மையாலும் துன்பப்படுகின்றனர்.

சமுதாய வாழ்வில் ஏற்படும் மாற்றங்களாலும் தொழில் வளர்ச்சியடைவதாலும் தற்போது குழந்தைகளின்பால் அதிக கவனம் செலுத்துவது அவசியமானது. சிறந்த பாலர் பாடசாலையில் அல்லது முன் பருவ பள்ளிகள் தொடங்கினாலும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உதவ முடியும்; குழந்தையின் பள்ளிப்பருவ கலவியானது குழந்தையின் மனம் மற்றும் மன எழுச்சி வளர்ச்சிக்கு முக்கியமான தேவையாகின்றது.

ஆகவே ஆரம்ப கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்காலத்pல் சிறந்த பிரஜையாக  உருவாகுவதற்கு எதிர்காலத்தில் சவால்களை  எதிர்கொண்டு மிளிரும் ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு அதற்கு இளம் சிறார்களுக்கு முன்னோடிகளாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிள்ளையின் ஆரம்ப கல்விக்கு உதவ வேண்டும் அப்போதுதான்  பிள்ளையின் அறிவு திறன் மனப்பாங்கு என்பன விருத்தி பெற்று பிள்ளையின் எதிர்காலம் பிரகாசமானதாக அமையும்

யோ.நிஜிதன்
2ம் வருடம் (சிறப்பு கற்கை) 
கல்வி பிள்ளை நலத்துறை
கிழக்குப்பல்கலைக்கழகம்.