5 தேசிய மட்ட விருதுகளை பெற்ற மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயம்

கொழும்பு Tower Hall Theatre Foundation நடாத்துகின்ற தேசிய விருது வழங்கல் நாடக விழாவில் இறுதி சுற்றில் ஆற்றுகை செய்யப்பட்ட மட்டக்களப்பு  ஸ்ரீ  மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் தயாரிப்பிலும் ரா. தனஞ்சயன் எழுத்துரு மற்றும் நெறிப்படுத்தலிலும் ஆற்றுகை செய்யப்பட்ட போலி முகம் நாடகம் 5 தேசிய மட்ட விருதுகளை நேற்று உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்டது.


சிறந்த நாடக தயாரிப்பு 1ம் இடம்: போலிமுகம்
சிறந்த நடிகர் 1ம் இடம் :றிலக்சன்
சிறந்த துணை நடிகர்1ம் இடம் : சஜித்
மேடை வடிவமைப்பு 1ம் இடம் : மிதுன்
எழுத்து பிரதி : 3ம்

இவிருதுகளை பெற பெரும் பலமாகவும் துணையாக நின்ற பாடசாலை அதிபர் வல்லிபுரம் முருகதாஸ்  ,  இசை பாட விதான ஆசிரியர் குமுதினி சுதாகர்  , ஏனைய ஆசிரியர் மாணவர்களிற்கும் நாடகத்திற்கான ஒளியமைப்பு வழங்கிய கணேஷன் கார்த்தி கார்த்திக்  ஆகியோருக்கு தங்களது  நன்றிகளை பாடசாலை சமூகம் தெரிவிக்கின்றது 

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இவ்விருது வழங்கல் நிகழ்வு ஒன்லைன் ஊடாக நடைபெற்றது.