மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்ட மட்ட ஆங்கிலத்தினப் போட்டி கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் இடம்பெற்றது.
கோட்டக்கல்விப் பணிப்பாளர் மூ.உதயகுமாரன் தலைமையில், முதலைக்குடா மகா வித்தியாலயம், அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் போன்ற இடங்களில் இப்போட்டிகள் இடம்பெற்றன.
கோட்டத்திற்குட்பட்ட 21பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டியின் இறுதி நிகழ்வானது, அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், புள்ளிகளின் அடிப்படையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற பாடசாலைகளுக்கு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. ரி.உதயாகரன், ஆசிரிய ஆலோசகர் திவாகரன், பாடசாலைகளின் அதிபர்கள், ஆங்கில வளவாளர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.