அனுமதிக்கப்பட்ட தொகையை விட அதிக தொகையை செலவு செய்தால் குடியுரிமையை இழக்க நேரிடும் ! தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை !


ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் பிரசாரத்தின்போது அனுமதிக்கப்பட்ட தொகையை விட அதிக தொகையை செலவிட்டமை கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், அவர்கள் தங்கள் பதவிகளை இழக்க நேரிடலாம் என்பதுடன் குடியுரிமையும் பறிக்கப்படலாமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவடைந்து 21 நாட்ளுக்குள் அவர்களின் வருமானம் மற்றும் அவர்களின் செலவீனங்கள் குறித்து வேட்பாளர்கள் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டுமென தெரிவித்துள்ள அவர், இந்த அறிக்கைகளை செய்தித்தாள்கள் இணையங்கள் மூலம் பகிரங்கப்படுத்துவோமெனவும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் வழங்கிய தகவல்களில் தவறு காணப்பட்டால் பொதுமக்கள் இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கலாம் எனவும் உரிய நடவடிக்கையை எடுக்கலாமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.