கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைககள் நிலையமும் சேரந்து நடாத்தும் முன் பிள்ளை பருவ அபிவிருத்தி மற்றும் முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறியின் 2025/2026 கல்வியாண்டுக்கான தொடக்கவிழா நிகழ்வு இன்று (19.07.2025) மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக தொழிநுட்ப பூங்கா கேட்போர் கூட மண்டபத்தில் நிலையப் பணிப்பாளர் பேராசிரியர் ச. ஜெயராஜாவின் வழிநடத்தலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ப. பிரதீபன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
சிறப்பு அதிதிகளாக பல்கலைக்கழக பீடங்களின் பீடாதிபதிகளும் நிதியாளரும் மற்றும் ஏனைய பல்கலைக்கழக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் இக்கற்கைநெறிக்கு நிதியுதவி வழங்கிய நிறுவனங்கள் சார்பாக கெளரவ விருந்தினர்களாக கலந்து கொண்ட கலாநிதி. பா. தனபாலன், திரு. ந. சச்சிதானந்தன் ஆகியோர் உபவேந்தரால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.
இக் கற்கைநெறிக்கு இம்முறை சுமார் 100 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.