தேசிய இளைஞர் சேவை மன்றம் மட்டக்களப்பு மாவட்ட ரீதியாக வெபர் உள்ளக விளையாட்டு அரங்கில் அண்மையில் நடாத்திய பூப்பந்தாட்டப் போட்டியில் பெரியகல்லாறு பூப்பந்தாட்ட விளையாட்டு கழகம் சார்பாக கலந்து கொண்ட உதயகுமார் தனுஜன் முதலாம் இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளார்.
இவர் பள்ளிப் பருவத்நிலிருந்தே பூப்பந்தாட்டத்தில் ஆர்வமாக இருந்து வருகின்றார்.
பாடசாலைக்காக மாகாண ரீதியிலும் விளையாடி சாதனை புரிந்துள்ளார்.
கல்லாறு பூப்பந்தாட்டக் கழகத்தின் தலைவர் புருஷோத்தமனே இவரின் பயிற்றுனராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.




.jpeg)








.jpeg)


