.jpeg)
ரவிப்ரியா
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில் நுட்பக் கல்லூரியில் 37 வகையான N.V.Q (மட்டம் 3 - 6) வரையான தகைமை கொண்ட புதிய கற்கை நெறிகள் க.பொ.த சாதாரணதரம் மற்றும் உயர்தரம் கற்று பரீட்சையில் தேறாத மாணவர்களுக்கு சிறப்பு நிதி பங்களிப்புடனான சலுகைகளுடன் 2026 ல் ஆரம்பிக்கப்பட இருப்பதாக கல்லூரியின் அதிபர் எம்.சோமசூரியம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் குறித்த மாணவர்களின் ஒளிமயமான நம்பிக்கையான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நோக்கோடு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இக்கற்கை நெறியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு நிபுணதா சிசு சவிய புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் ரூபா ஐயாயிரம் மாதாந்தக் கொடுப்பனவு பயிற்சி காலத்தில் வழங்கப்படுவதுடன் போக்குவரத்திற்கான மானிய அடிப்படையில் பருவகாலப் பயணச் சீட்டு வசதிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அவர்கள் பயிற்சி நிறைவு பெற்றதும் சுய தொழிலை உடனடியாக ஆரம்பிப்பதற்கு வங்கி மூலம் கடன் வசதியும் செய்து கொடுப்பதுடன் உள்நாட்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்குரிய பொருத்தமான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும்.
எனவே இந்த அரிய வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு எமது கல்லூரியில் இருந்து விண்ணப்பத்தையும் கற்கை நெறிகள் பற்றிய விபரங்களையும் பெற்று 04.12.2025 க்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இணையத்தள மூலமும் விண்ணப்பிக்கமுடியும் அதற்கான இணையத்தள முகவரி இணைக்கப்பட்டுள்ளது. https://ism.dtet.gov.lk/ online dtet/ Public/Application












