
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட 950 கிலோ கேரளா கஞ்சா தீயிட்டு செவ்வாய்க்கிழமை (04) அழிக்கப்பட்டன.
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் மற்றும் மேலதிக நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் சான்று பொருட்களாக நீதிமன்றில் வைக்கப்பட்டிருந்தன.
அது தொடர்பிலான வழக்கு விசாரணைகளை தொடர்ந்து 950 கிலோ கஞ்சாவையும் தீயிட்டு அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் கோம்பயன் மணல் மயான மின் தகன மேடையில் கஞ்சா போதைப்பொருள் தீயிட்டு முற்றாக அழிக்கப்பட்டன.
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதபதி மற்றும், மேலதிக நீதவான் ஆகிய இருவரின் நேரடி கண்காணிப்பில் அவை அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












