
மினுவாங்கொடை - அலுத்தோபொல பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டியின் போது இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விளையாட்டின்போது நபரொருவர் காயமடைந்து மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை(09) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பலுகஹவெல - கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
விளையாட்டு போட்டியின் போது பந்தைப் பிடிக்க முயன்றபோது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக, முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்வரின் சடலம் மினுவாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












