சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கான பேரூந்துகள், வேன்கள், மலக்கழிவகற்றல் பவுசர் மற்றும் உழவு இயந்திரங்கள் போன்ற உபகரணங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2025.11.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 11 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பல்வேறு நீதிமன்றங்களால் தடுப்புக் காவலில் வைக்கப்படும் சந்தேக நபர்கள் மற்றும் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகள் தொடர்பாக நீதிமன்றத்துடன் நேரடித் தொடர்பு கொண்டு கடமைகளை மேற்கொள்ளும் போது மற்றும் குறித்த கைதிகளின் நலனோம்புகை தொடர்பாக செயலாற்றும் போது சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பணிகளை வினைத்திறனாக மேற்கொள்ளும் போது தேவையான வாகன வசதிகளை வழங்க வேண்டிய தேவை மேலெழுந்துள்ளது.
அதற்கமைய, சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு 44 இருக்கைகள் கொண்ட 30 பேரூந்துகள், 30 இருக்கைகளைக் கொண்ட 10 பேரூந்துகள், 10 வேன்கள், 05 மலக்கழிவகற்றல் பவுசர்கள் மற்றும் 03 உழவு இயந்திரங்கள் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்கான தேசிய போட்டி பெறுகை முறையின் கீழ் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.
அதற்கமைய, குறித்த விலைமுறிகள் தொடர்பாக உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கான வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான பெறுகையை கீழ்வரும் வகையில் வழங்குவதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.













