அரசடியில் இயங்கும் இரவு உணவகத்தில் கொத்து ரொட்டி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த நபர் மீது, மதுபோதையில் வந்த இளைஞர்கள் குழு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின்போது, குறித்த குழுவினர் இரவு 12.00 மணியளவில் உணவகத்துக்கு வந்து கொத்து ரொட்டி ஆர்டர் செய்துள்ளனர். உணவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறி, கொத்து ரொட்டி தயாரித்த நபரை தலைக்கவசத்தால் தலையில் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய பின்னர், குறித்த இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து, சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.













.jpg)