
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இரண்டுவருடங்கள் பூரணமாகும் எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி அரசாங்கத்தை விரட்டியடிக்கும் மக்கள் போராட்டத்தை நாங்கள் ஆரம்பிப்போம். அதனால் எங்களை சிறையில் அடைத்தும் எமது பிரஜா உரிமையை இல்லாமல் செய்தும் எம்மை அச்சுறுத்த நினைக்கவேண்டாம் அதற்கு நாங்கள் அச்சப்படப்போவதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பொய்யையும் திருட்டையும் ஒன்றாக தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் கூட்டு எதிர்க்க்கட்சி நேற்று கம்பஹ ஜாஎல பிரேதேசத்தில் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு உரையா்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் ஆகியுள்ளன. இந்த காலப்பகுதியில் அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, அதன் ஆரம்ப நிகழ்வுகளை கோலாகலமாக மேற்கொண்டிருந்தன.
ஆரம்பமாக கிளீன் சிறீலங்கா என்ற வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார்கள். இந்த வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு மக்களின் எதிர்ப்பு எழ ஆரம்பித்ததுடன் அந்த வேலைத்திட்டம் செயலிழக்க ஆரம்பித்தது. தற்போது நகரங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் மலைபோன்று குவிந்து காணப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார்கள்.ஆரம்பமாக சம்பத் மனம்பேரியின் போதைப்பொருள் அடங்கிய 2 கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டதாக பாரிய பிரசாம் மேற்கொண்டு வந்தார்கள். பின்னர் அந்த 2 கொள்கலன்களும் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட காப்பகுதியில்தான் வெளிவந்துள்ளமை தெரியவந்ததுடன் அதுதொடர்பில் நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நுவரேலியாவில் ஐஸ் போதை பொருளுடன் கம்பனி ஒன்றி கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தார்கள். தற்போது அதுதொடர்பில் எந்த தகவலும் இல்லை. கடல் மார்க்கமாக வந்த 2லாெரி போதைப்பொருள் கைப்பற்றியதாக தெரிவித்தார்கள். பின்னர் அது சான்த்தவுக்கு உரியது என தெரியவந்ததுடன் அந்த 2லொரிகள் தொடர்பில் எந்த விசாரணையும் இல்லைை.
பின்னர் தித்வா புயலைத் தொடர்ந்து ரீ பில்டிங் சிறிலங்கா வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார்கள். தித்வா அனர்த்தம் ஏற்பட்டு 6மாதங்கள் கடந்தும் மண்சரி ஏற்பட்ட பிரதேசங்கள் பல இன்னும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன. புகையிரத பாதைகள் திருத்தப்படாமல் இருக்கின்றன. இவ்வாறு அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. அதேநேரம் அரசாங்கம் பாதுகாத்த போதைப் பொருள் வியாபாரிகள் அனைவரையும் நாங்கள் சட்டத்துக்கு முன் நிறுத்துவோம்.
அதேபோன்று அரசாங்கம் வாகன இறக்குமதிக்கு 50வீ அதிகரித்து வர்த்தமானி வெளியிடுவதற்கு ஒரு நாளைக்கு முன்னர் ஆயிரக்கணக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய வங்கி கடன் பற்றுப்பத்திரம் திறக்கப்பட்டிருக்கிறது. சாதாரணமாக நாள் ஒன்றுக்கு 2.2 மில்லியன் டொலருக்கே வங்கி கடன் பற்றுப் பத்திரம் திறக்கப்பட்டு வந்தது.
ஆனால் ஜனாதிபதி 50வீத வரி அதிகரித்து வர்த்தமானி வெளியிடுவதற்கு 3 நாட்களில் 43 மில்லியன் டொலருக்கு வங்கி கடன் பற்றுப்பத்திரம் திறக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி வாகனங்களுக்கு வரி அதிகரிக்கப்போகும் ததகவல் எப்படி இந்த வியாபாரிகளுக்கு கிடைத்தது.? அநுரகுமார அரசாங்கத்திலும் உற்ற நண்பர்கள் கலாசாரம் இடம்பெறுகிறது.
மேலும் நாட்டில் தற்போது டொலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு நாளுக்கு நாள் டொலரிய் பெறுமதி அதிகரித்து செல்கிறது. இதற்கான காரணத்தை மத்திய கிழக்கு யுத்தத்தின் மீது சுமத்த அரசாங்கம் முயற்சித்து வருகிறது. ஆனால் அரசாங்கத்தின் பிழையான முகாமைத்துவமே டொலரின் பெறுமதி அதிகரிக்க காரணமாகும்.
தொடர்ந்தும் இந்த அரசாங்கம் மக்கள் வாழமுடியாத நிலைக்கு பொருட்களின் விலையை அதிகரித்திருக்கிறது. அதனால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்து இரண்டுவருடங்கள் பூரணமாகும் எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி, அரசாங்கத்தை விரட்டியடிக்கும் மக்கள் போராட்டத்தை நாங்கள் ஆரம்பிப்போம். எனவே எங்களை சிறையில் அடைத்தும் எமது பிரஜா உரிமையை இல்லாமல் செய்தும் எம்மை அச்சுறுத்த நினைக்கவேண்டாம் அதற்கு நாங்கள் அச்சப்படப்போவதில்லை என்றார்.






.jpeg)
.jpeg)




