தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதால் நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வடக்கு, வடமத்திய, தென் மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
கடற்பிராந்தியங்களிலும் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை காணப்படக்கூடும் என்பதால் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





.jpeg)
.jpeg)





