
கண்டி, ஹந்தானை சந்தகிரி மகா சாய விகாரையில் "தாது மந்திர" பகுதியில் சனிக்கிழமை (23) கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த சுமார் 20 பவுன் தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக மூன்று விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மோப்ப நாய்கள் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
விசேட பொலிஸ் குழுவினர் தடயவியல் சோதனைகள் மற்றும் கைரேகை அடையாளம் என்னபவற்றை பரிசோதனை செய்து வருகின்றதுடன் மகா சாயவுக்குச் செல்லும் வீதிகளில் உள்ள பாதுகாப்பு சிசிரிவி காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலீஸ் மா அதிபரின் மேற்பார்வையில், கண்டி பொலிஸ் தலைமையகத்தினால் அமைக்கப்பட்ட பல விசாரணைப் பிரிவுகள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றன.






.jpeg)
.jpeg)




