ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்த விடயங்கள் வருமாறு,
மே 19 ஆம் திகதி காலை 10:30 மணியளவில், 4ஆவது விஜயபாகு காலாற்படைப் பிரிவின் செர்ஜன் முத்துபண்டா தலைமையிலான இராணுவக் குழுவினரே நந்திக்கடல் களப்பின் சேறு நிறைந்த வடமுனைப் புதர்க்காட்டிலிருந்து வேலுப்பிள்ளை பிரபாகரனின் உயிரற்ற உடலை மீட்டெடுத்தனர்.
அவ்வாறு மீட்டெடுக்கப்பட்ட உடல் வேலுப்பிள்ளை பிரபாகரனுடையதுதான் என்பதை எவ்வித சந்தேகமுமின்றி சர்வதேசத்துக்கும் உள்நாட்டுக்கும் நூறு சதவீதம் உறுதிப்படுத்துவதற்கான விசேட அடையாளக் காணல் ஏற்பாடுகளைத் முன்னரே திட்டமிட்டிருந்தோம்.
பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்ட உடனேயே, அவரோடு நீண்டகாலம் மிக நெருக்கமாகப் பழகியிருந்த மற்றும் அவரைப் பற்றி முழுமையாக அறிந்திருந்த முக்கிய நபர்களைக் கொண்டு முதற்கட்டமாக சாட்சியப் பூர்வமாக அடையாளம் கண்டிருந்திருந்தோம்.
அதன்படி, விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து பின்னர் அரசாங்கத்துடன் இணைந்திருந்த அந்த அமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண கட்டளை தளபதியான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானை; ஹெலிகொப்டர் மூலம் பிரபாகரன் உடலம் இருந்த பகுதிக்கு இராணுவம் உடனடியாக அழைத்துச் சென்றது. அங்கு உயிரிழந்த அனைவரையும் கருணா அடையாளம் காட்டினார். சூசை மற்றும் பொட்டு அம்மான், அவரது மனைவி உள்ளிட்ட புலிகளின் முக்கிய நபர்களை அடையாளம் காட்டினார்.
பிரபாகரன் உயிருடன் பிடிபட்டால் அவரை அரசியல் ரீதியாகப் பயன்படுத்திப் பின்னர் வட-கிழக்கு முதலமைச்சராக்கக் கூடும் என்பதால், அவரை உயிருடன் பிடிப்பதல்ல என்பதே எமது நிலைப்பாடாக இருந்தது.
அவரைப் போர்க்களத்தில் முற்றாக ஒழிப்பதே தனது இராணுவத்தின் திட்டமாக இருந்தது. பீரங்கிகள், எறிகணைகள் மற்றும் எறிகணை செலுத்திகள் போன்ற அனைத்து வகையான கனரக ஆயுதங்களையும் கொண்டு இராணுவத்தினர் பிரபாகரனின் உடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இறுதித் தாக்குதலை நடத்தியதால், அவர் சாதாரண காயங்களுடன் இறக்கவில்லை.
அத்தகைய கனரக ஆயுதங்கள் தாக்கும் போது மனித உடலின் பாகங்கள் சிதறிப்போகும் என்பதால், பிரபாகரனின் உடலின் ஒரு பகுதி அதாவது தலையின் ஒரு பகுதியும் அவ்வாறே சிதைந்திருந்தது. அவர் விடுதலைப் புலிகளின் இராணுவ சீருடை அணிந்திருந்ததாக எனக்கு போர்க்களத்தில் இருந்து அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்த போது, அந்தச் சீருடையை உடனடியாகக் கழற்றிவிடுமாறு தான் கட்டளையிட்டேன்.
ஏனெனில் அதற்கு முன்னர் எங்களிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுச் சரணடைந்த பன்னிரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எவருக்கும் சீருடை அணிய நாங்கள் அனுமதிக்கவில்லை அந்தப் போர்க்கால விதியையே பிரபாகரன் விடயத்திலும் பின்பற்றினோம்.
அதன் பின்னர், பிரபாகரனின் உடலத்தை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த இறுதி அறிவுறுத்தல்களை நான் இராணுவத்துக்க வழங்கிய போதிலும், அது என்னவென்பதை தற்போது வரையில் வெளியில் யாருக்கும் கூறியதில்லை.
அந்த உடலத்தின் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு அழிக்கப்பட்ட குறிப்பிட்ட இடத்தை வெளியிட்டால், பிற்காலத்தில் எவராவது அல்லது அரசியல் உள்நோக்கம் கொண்ட தரப்பினர் அங்கு சென்று நினைவேந்தல்களை நடத்தவோ அல்லது அந்த இடத்தை வரலாற்றுச் சிதைவாக மாற்றி அங்கு நினைவிடங்களை அமைக்கவோ முற்படலாம்;.
அவ்வாறு நினைவிடங்கள் அமைக்கப்பட்டால், அது நாட்டின் எதிர்காலப் பாதுகாப்புக்கும், இன நல்லிணக்கத்துக்குமி;, நாட்டின் இறையாண்மைக்கும் மீண்டும் பாரிய அச்சுறுத்தலாகவோ அல்லது தூண்டுதலாகவோ அமைந்துவிடக்கூடும்.
எனவே தான், நாட்டின் எதிர்காலப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, அந்தப் பகுதியிலேயே குறிப்பிட்ட இரகசிய இடத்தில் அவரது உடலுக்குச் செய்ய வேண்டிய இறுதி விடயங்களை இராணுவம் செய்து முடித்த போதிலும், அது எங்கு எப்படிச் செய்யப்பட்டது என்ற இரகசியம் ஒருபோதும் வெளியில் வராது என்றார்.






.jpeg)

.jpeg)




