
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முதலைக்குடா பகுதியிலுள்ள வீடு மற்றும் அந்த பகுதியில் உள்ள களப்பு பகுதியில் (வாவியில்) சூட்சகமான முறையில் கசிப்பு உற்பத்தி நிலையங்களை சனிக்கிழமை (23) முற்றுகையிட்ட பொலிஸார் பெண்ணொருவரை கைது செய்ததுடன் இருவர் தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக முதலையிக்குடா பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இனைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் முற்றுகையிட்ட கசிப்பு உற்பத்தி நிலையத்திலிருந்து 13 இலட்சத்து 82 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா மற்றம் 75000 மில்லி லீற்றர் கசிப்பு பீப்பாய்கள் உட்பட பல உபகரணங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பகுதிகளில் உள்ள களப்புடன் உள்ள கண்ணா காடு பகுதிகளில் சூட்சுமமான முறையில் கசிப்பு உற்பத்தியை செய்து அங்கிருந்து தோணிகள் மூலமாக தாழங்குடா, மாவிலங்குத்துறை, கல்லடி, நாவற்குடா, மட்டு கருவப்பங்கேணி, போன்ற பிரதேசங்களுக்கு கசிப்பு விற்பனை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சட்டவிரோத செயற்பாட்டு தொடர்பாக விசேட புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவல்களை அடிப்படையாக வைத்து பொலிஸ் விசேட நடவடிக்கை ஒன்றை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அபேரத்ன தலைமையில் இரு குழுவினர் அந்த களப்பு பகுதியை முற்றுகையிட்டனர்.
இதன்போது களப்பில் உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 இலட்சத்து 82 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா, 8 பீப்பாய்கள் மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்களை கைப்பற்றியுள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்னும் ஒரு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டதையடுத்து உற்பத்தியில் ஈடுபட்வர்கள் தப்பி ஓடியுள்ள நிலையில் அங்கிருந்து பிளாஸ்ரிக் போத்தல்கள் கொண்ட 4 பொதிகள், 08 ஊறல் பீப்பாய்கள் , 02 தோணிகள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





.jpeg)

.jpeg)




