சாய்ந்தமருதில் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது..



 அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட இரு வேறு இடங்களில் நீண்ட காலமாக போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த சந்தேக நபர்களை சாய்ந்தமருது பொலிஸார் சனிக்கிழமை(23) மாலை கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது சாய்ந்தமருது-14 பிரிவை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் 2,220 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப் பொருளை விற்று பெறப்பட்ட ஒரு தொகுதி பணத்துடன் கைதானார்.

இதே வேளை மாவடி பகுதியை சேர்ந்த மற்றுமொரு சந்தேக நபர் 2,300 மில்லி கிராம் ஹெரோயின் விற்பனைக்கு தயாராக வைத்திருந்த 60 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் , ஒரு தொகுதி பணம் ஆகியவற்றுடன் கைதானார்.

இந்த சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.