
அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டமடு பகுதியில், நேற்று சனிக்கிழமை (23) மாலை காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நாவக்காடு பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபர் மாடுகளுக்கு புல் வெட்டிக் கொண்டிருந்த போதே இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் திருக்கோவில் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.





.jpeg)
.jpeg)





