நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்துவது குறித்து அரசாங்கம் ஆலோசிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மாறாக பல்வேறுபட்ட தொழில்களில் ஈடுபடுவோரின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.