.jpg)
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பின் போது வழமைக்கு மாறாக மேலதிகமாக கொழுந்து பறிக்க வேண்டும். அப்போது தான் புதிய சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்று கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏதும் உள்ளடக்கப்படவில்லை என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.
இன்று (09) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்விலேயே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சம்பள அதிகரிப்பு தொடர்பாக கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், மேலதிக கொழுந்து பறிப்பு கட்டாயம் என்ற எந்த விதிமுறையும் உள்ளடக்கப்படவில்லை.
எனினும், ஒருசில பகுதிகளில் வழமைக்கு மாறாக மேலதிகமாக கொழுந்து பறிக்க வேண்டும் என்று தோட்ட நிர்வாகத்தினர் குறிப்பிடுவதாக அறிய முடிகிறது.இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பில் எவ்வித சட்டச் சிக்கலும் இல்லை. அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு தொடர்ச்சியாக வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.








.jpg)



