விவசாய அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் விழிப்பூட்டல்

கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவு அமைய கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் நோக்குடன் மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில்


 மாமரச் செய்கையில் கத்தரித்தல் பயிற்றுவித்தல் தொடர்பான வெளிப்பூட்டல் நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்கள பணிப்பாளர் எஸ் பரமேஸ்வரன் தலைமையில் கும்பிலா மடு விவசாய கிராமத்தில் இடம்பெற்றது


 இதன்போது மாமரச் செய்கையில் ஏற்படும் பூச்சித் தாக்கம் இலை கருகுதல் மாமரக் கன்றுகளை எவ்வாறு உரிய முறையில் நாட்டுதல் கத்தரித்தலுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துதல்


 அதன் விளைச்சலை எவ்வாறு அதிகரித்தல் பூக்கின்ற வீதத்தை கூட்டுதல் சூரிய ஒளியின் பயன்பாடு உணவு தயாரித்தல் கிருமி நாசினி விசுறுதல் என்பன வெற்றி இங்கு விவசாயிகளுக்கு விரிவான விளக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அவர்களது சந்தேகங்களும் நிவர்த்தி செய்யப்பட்டன


இந்த நிகழ்வில் உதவி விவசாய பணிப்பாளர் திருமதி V.காயத்ரி சத்திரக் கொண்டான் விவசாய போதனா ஆசிரியர் S.ஞானப்பிரகாசம் விவசாயிகள் பொதுமக்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.