கப்புவத்தை - கந்தானை இடையே புகையிரதம் - முச்சக்கர வண்டி மோதி விபத்து ; இருவர் உயிரிழப்பு


 சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
 
இன்று (09) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கப்புவத்தை மற்றும் கந்தானை ஆகிய நிலையங்களுக்கு இடைப்பட்ட ரயில் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது