மேஷ ராசி வாசகர்களே! உங்களின் ஆறாம் ராசியில் சஞ்சரித்த சனி பகவான் ஏழாம் ராசியான சப்தம ராசியில் திக் பலம் பெற்று, 15.11.2011 முதல், முதல் கட்டமாக 15.5. 2012 வரை துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார்.
இந்தக் காலகட்டத்தில் குரு பகவானின் பார்வையில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்களின் வாழ்க்கையில் நிரந்தரத் தன்மையை உண்டாக்குவார். அலைச்சல்கள் மற்றும் மன உளைச்சல்கள் மறையும். அனைத்து விஷயங்களும் உங்கள் மனதுக்குப் பிடித்த மாதிரி நடந்தேறும். எதிரிகளின் சலசலப்பிற்கு அஞ்சாமல் அவர்களை நேரடியாக எதிர்கொள்வீர்கள். தேவையில்லாத வேலைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு வருமானம் தரும் காரியங்களை மட்டுமே செய்வீர்கள். செய்தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உங்களின் செயலாற்றல் அதிகரிக்கும். வராது என்று நினைத்திருந்த அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்கள் வாசல் கதவைத் தட்டும். பெரியவர்களைத் தேடிச் சென்று அவர்களின் அறிவுரைகளைக் கேட்பீர்கள். உங்கள் மனதில் புதிய திட்டங்கள் தோன்றும். அவற்றை ரகசியமாக நிறைவேற்றிப் பலன் பெறுவீர்கள்.
16.5.2012 முதல் 80 நாட்கள் அதாவது 3.8.2012 வரை சனி பகவான், வக்கிர கதியில், கன்னி ராசியில், குரு பகவானின் பார்வையில் சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் உங்கள் முயற்சியால் முடியாதது ஒன்றுமில்லை என்ற அளவுக்கு சாதனைகளைச் செய்வீர்கள். சமுதாயத்தில் புதிய அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். இல்லத்தில் தடைபட்டிருந்த சுபநிகழ்ச்சிகள் நல்லபடியாக நடந்தேறும். குடும்பத்தாருடன் விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். விருந்தினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். வாகனம் வாங்குவீர்கள். குழந்தைகள் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள்.
4.8.2012 முதல் 2.11.2014 வரை மறுபடியும் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் பொதுவாக உங்கள் காரியங்களை வெற்றி பெறச் செய்தாலும் அவற்றில் நண்பர்களின் தலையீடு அநாவசியமாக இருக்கும். உங்களின் தேவைகள் அதிகரிக்கும் அளவுக்கு வருமானம் அதிகரிக்காது. கடினமாக முயற்சி செய்தால்தான் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். அரசு வழியில் சிறு தொல்லைகள் உண்டாகும். உங்கள் பேச்சுகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படும். அதனால் எவரிடமும் அநாவசியப் பேச்சு வேண்டாம். கேட்காமல் எவருக்கும் அறிவுரைகளையும் கூற வேண்டாம். உற்றார், உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அனைத்துப் பிரச்னைகளையும் தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள்.
31.5.2013க்குப் பிறகு சனி பகவானுக்கு குரு பகவானின் அருட்பார்வை கிடைக்கிறது. இந்தக் காலகட்டத்தில் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி முடியும். பணப்
புழக்கம் அதிகரிக்கும். பழைய கடன்கள் திரும்பக் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, கௌரவம் உயரும். குடும்பத்தில் ஆனந்தம் நிறையும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகள் உங்கள் கண்களில் படாமல் மறைந்து போவார்கள். புதிய பொறுப்புகளையும் ஏற்று நடத்துவீர்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைப் பளு அதிகரித்தாலும் அவற்றைத் திட்டமிட்டுச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். சக ஊழியர்களை உங்களின் அமைதியான அணுகுமுறையால் கவர்வீர்கள். சிலருக்குக் குறுகிய காலப் பயணமாக வெளிநாடுகளுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும். இந்தக் காலகட்டம் முழுவதும் பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.
வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் நன்றாக முடியும். கூட்டாளிகள் உங்களிடம் சுமுகமாகப் பழகுவார்கள். உங்களின் வியாபார யுக்திகள் சரியான இலக்குகளை எட்டும். புதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும். மற்றபடி கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். போட்டிகளைச் சமாளித்து வெற்றியடைவீர்கள்.
விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். இடைத் தரகர்களைத் தவிர்த்து பொருட்களை நல்ல விலைக்கு விற்பீர்கள். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். வருமானம் நன்றாக இருப்பதால் பாசன வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். கால்நடைகளாலும் நன்மை உண்டாகும்.
அரசியல்வாதிகள் பெரும் சாதனைகளைச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உங்களைத் தேடிப் பதவிகள் வரும். உங்களின் ரகசியத் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். எதிரிகளின் பலம் குறையும். உங்களுக்கு எதிராகப் போடப்பட்டிருந்த வழக்குகள் சாதகமாக முடிவடைந்துவிடும். அரசாங்க அலுவலர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தொண்டர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தி அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள்.
கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் சீராக இருக்கும். ரசிகர்களுக்காக சில செலவுகளைச் செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். அவர்களை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். உங்கள் திறமைகளைப் பயன்படுத்திப் புதிய படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.
பெண்மணிகளுக்கு நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உற்றார், உறவினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உடல் ஆரோக்யம் சீராக இருந்தாலும் யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை செய்வீர்கள். பொருளாதாரம் ஏற்றமாக இருக்கும். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தாருடன் மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உற்சாகமான மனநிலை உருவாகும். உடல் ஆரோக்யம் வலுப்பெற எளிமையான சில பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். கஷ்டப்பட்டு படித்து எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். மற்றபடி நீங்கள் சாதனைகள் செய்யக்கூடிய காலகட்டமாகவே இது அமைகிறது.
பரிகாரம்: இந்த சனிப்பெயர்ச்சி காலம் முழுவதும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். விநாயகர் அகவலையும் முடிந்தவரை படிக்கவும். முடிந்தால் --