உங்களுக்கு அஷ்டம சனியாக சஞ்சரித்து வந்த சனி பகவான் 15.11.2011 முதல், முதல்கட்டமாக 15.5.2012 வரை பாக்யஸ்தானமான துலாம் ராசியில் உச்சம் பெற்று குருபகவானின் பார்வையைப் பெற்று சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் உங்கள் செயல்களை நன்றாக சிந்தித்து முடிவு செய்து செயல்படுத்துவீர்கள். செய்தொழிலை உங்கள் நிறை குறைகளுக்கு ஏற்ப மாற்றி அமைப்பீர்கள். பழைய கால அனுபவங்கள் உங்களுக்கு உதவும். உற்றார், உறவினர்களும், நண்பர்களும் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்திருந்த உதவிகள், சலுகைகள் ஆகியவை கிடைக்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். அநாவசிய செலவுகளும், விரயங்களும் ஏற்படாது. கடினமான உழைப்புக்கு நடுவில் சரியான நேரத்தில் ஆகாரத்தையும், தேவையான ஓய்வையும் எடுத்துக்கொள்வீர்கள். உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நலம் சீராகும். உங்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த சகோதர, சகோதரிகள் அடங்கிவிடுவார்கள்.
16.5.2012 முதல் 80 நாட்கள் அதாவது 3.8.2012 வரை வக்கிரகதியில் அஷ்டம ராசியான கன்னி ராசியில் குரு பகவானின் பார்வையைப் பெற்று சனி பகவான் சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் வராது என்று நினைத்துக்கொண்டிருந்த கடன் திரும்பவும் கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். குடும்பத்தின் தேவைகள் சுலபமாக நிறைவேறும். புதிய. முயற்சிகளால் வருமானத்தைப் பெருக்குவீர்கள். சமூகத்தில் பெரியோர்களை சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். செய்தொழிலில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். மாற்றுக் கருத்துடையோருக்கும் மதிப்பு கொடுப்பீர்கள். புதிய யுக்திகளைப் புகுத்தி செயல்திட்டங்களை வெற்றியடையச் செய்வீர்கள். பேச்சில் நிதானம் தேவை. உடல் ஆரோக்யத்திலும் கவனம் செலுத்தவும்.
4.8.2012 முதல் 2.11.2014 வரை மறுபடியும் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்களுக்கு சீரான யோக பாக்கியங்களை வழங்குவார். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பொருளாதாரத்தில் எந்த விதமான சிக்கலும் ஏற்படாது. பறிபோன பதவி திரும்பவும் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படத் தொடங்குவீர்கள். அதிகமாக உழைத்து நல்ல லாபத்தைக் காண்பீர்கள். உங்கள் விருப்பப்படி சரியான முடிவுகளை எடுப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வழக்குகளிலும் சாதகமான திருப்பங்களைக் காண்பீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று தொழில் செய்யும் வாய்ப்பு உண்டாகும். இந்த மாற்றத்திற்குச் சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
31.5.2013க்குப் பிறகு குரு பகவானின் பார்வையைப் பெற்று சனி பகவான் சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் முன் வைத்த காலை பின் வைக்காமல் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். முந்தைய காலத்தில் அரை குறையாக விட்ட காரியங்களை செய்துமுடிப்பீர்கள். செய்தொழில் வளர்ச்சிக்காக புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டு அகலும். நண்பர்களால் ஏற்பட்ட மன வருத்தங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் வலம் வருவீர்கள். உற்றார், உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். சகோதர. சகோதரிகளுக்கு உதவி செய்ய வாய்ப்புகள் ஏற்படும். மற்றபடி நீங்கள் ஆக்கபூர்வமாக செயல்படும் காலகட்டம் இது.
உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் தொய்வு இல்லாமல் நடந்துமுடியும். சரியான பயிற்சிகளை மேற்கொண்டு திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள். எதிர்வரும் இடையூறுகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். மேலதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். அதனால் அவர்களிடமிருது நன்மைகளை எதிர்பார்க்கலாம். சிறுசிறு தொல்லைகள் கொடுத்து வந்த சக ஊழியர்கள் அடங்கிவிடுவார்கள். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. தடங்கல் ஏற்பட்டாலும் பதவி உயர்வு கிடைத்துவிடும்.
வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் ஒழுங்காக நடக்கும். வியாபாரத்தில் திடீர் அதிர்ஷ்டங்களைப் பெறுவீர்கள். கூட்டாளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். வியாபாரிகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய முதலீடுகளைச் செய்யாமல் விரைவில் விற்கும் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வியாபாரம் செய்வீர்கள்.
விவசாயிகள் குறுகிய காலப் பயிர்களையும், ஊடு பயிர்களையும் பயிரிட்டு நலம் பெறுங்கள். கால்நடைகளை வைத்திருப்போர் நல்ல பலன்களை அடைவீர்கள். விவசாய உபகரணங்களை வாங்கி பயிர் விளைச்சலை இரட்டிப்பாக்குவீர்கள். புதிய குத்தகைகளை நன்கு யோசித்து எடுக்கவும். வங்கிக் கடன்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்பதால் பொறுமையுடன் இருந்து கடன்களைப் பெற்று எதிர்காலத்திற்கு வித்திடவும்.
அரசியல்வாதிகளுக்கு உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். தொண்டர்களை அனுசரித்து நடந்துகொண்டு உங்கள் செயல்களை முடிப்பீர்கள். கட்சிப் பிரசாரங்களில் முழு மூச்சுடன் இறங்குவீர்கள். கட்சியில் உங்கள் செல்வாக்கை அதிகரித்துக்கொள்வீர்கள். நண்பர்களால் ஏற்றம் பெறுவீர்கள். மற்றபடி இந்தக் காலகட்டத்தில் எவருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள்.
கலைத்துறையினர் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். உங்கள் செயல்களில் சிறிது தடுமாற்றம் ஏற்பட்டாலும், உங்கள் செல்வாக்கு குறையாது. வெளியூர் சென்று நிகழ்ச்சிகளை நடத்தும்போது ரசிகர்களின் தேவையறிந்து பூர்த்தி செய்யவும். சிறிய தடைகளுக்குப் பிறகே புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
பெண்மணிகளுக்கு பெற்றோர் வழியில் பெருமைகள் வந்து சேரும். பிள்ளைகளாலும் பெயரும், புகழும் பெறுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும். மூத்த சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்களுக்கு மாநில அளவில் சாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். உடற்பயிற்சி செய்து அதைத் தக்க வைத்துக்கொள்ளவும். சில நேரங்களில் மனக்குழப்பத்திற்கு ஆளாக நேரிடலாம். பெற்றோரின் ஆதரவு இருப்பதால் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வீர்கள். நண்பர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பேச வேண்டாம். பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட்டு நலன் பெறவும். முடிந்தால் சோளிங்கர் சென்று அமிர்தவல்லி சமேத ஸ்ரீயோக நரசிம்மரை வழிபட்டு வரவும்.--