கல்முனையில் பாரிய கடலரிப்பு! பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர்


 கல்முனையில் தினமும் பாரிய கடலரிப்பு   இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

கடலரிப்பால் பல  குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.தற்போது கடல் சீற்றமாயிருப்பதால் மேலும் கடலோரங்கள் உள்வாங்கப்படலாமெனத் தெரிகிறது.

கல்முனை 1ம் குறிச்சியிலுள்ள குடிமனைகள் கிணறுகள் தென்னை மரங்கள் யாவற்றையும் படிப்படியாக கடல் படிப்படியாக  உள்வாங்கிககொண்டிருக்கிறது.


இத்தென்னை மரங்கள் கரைவலைத் மீன்பிடித்  தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பாரிய சவாலக உள்ளது.பல லட்ச ருபா பெறுமதியான வலைகளை  தினமும் சேதப்படுத்திவருகிறது.
 அங்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பிளர் பொ.பியசேனவிடம் மக்கள் எடுத்துக்கூறினர்.











படங்கள் வி.ரி.சகாதேவராஜா  காரைதீவு  நிருபர்