பாலர் பாடசாலைகள் வெளிநாட்டில் உள்ளது போல் விளையாட்டுப் பாடசாலையாக அமையவேண்டும்


( சிவம் ) எழுத்தைப் பழக்கும் இடம் பாலர் பாடசாலை அல்ல செயற்பாட்டுடன் கூடிய கல்வியைப் புகட்டும் இடமே பாலர் பாடசாலையாகும்.
இவ்வாறு கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தின் தவிசாளர் பொன் செல்வநாயகம் தெரிவித்தார்.


மட்டக்களப்பு தாண்டவன்வெளியில் பாலர் பாடசாலையுடன் கூடிய சிறுவர் பராமரிப்பு நிலையம்  “ FUTURE MINDS KINDERGARTEN & CHILD CARE" அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அவர் கலந்து கொண்டு மேலும் கூறுகையில்

எமது மாகாணத்தில் அதிகமான பாலர் பாடசாலைகள் எழுத்தறிவைப் புகட்ட வேண்டும் என்கின்ற எடுகோளில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. வெளி நாடுகளில் பாலர் பாடசாலைகள் விளையாட்டுப் பாடசாலைகளாகவே  செயல்படுகின்றன. அங்கு ஒவ்வோரு செயற்பாட்டுத் துறைகளுக்கும் பட்டதாரிகளும் மற்றும் பேராசிரியர்களும் செயல்படுகின்றனர். இந்நிலை எமது நாட்டில் இல்லை. இந்நிலை மாறி வெளிநாட்டைப்போல் இங்கும் மாற்றம் பெற வேண்டும்.

இதற்கு பெற்றோரின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் ஏனனில் இங்கு பெற்றோரின் எண்ணம் தம் குழந்தைகள் விரைவாக எழுத்தறிவினைப் பெற வேண்டும் என்பதேயாகும்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரில் திட்டமிடப்பட்டு சகல வழங்களுடன் கூடிய வெளிநாடகளில் இருக்கும் பாலர் பாடசாலைக்கு ஒத்ததான செயலபாட்டுடன் கூடிய பராமரிப்பு நிலையமாக இது திறக்கப்பட்டுள்ளது கிழக்கு மாகாணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்.

கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தின் தவிசாளர் மேலும் தெரிவிக்கையில்

கிழக்கு மாகாணத்தில் 2010 ஆம் ஆண்டு பாலர் பாடசாலைப் பணியகம் ஆரம்பிக்கப்பட்டது. இப்பணியகத்தில் 1758 பதிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலைகளில் 3822 அசிரியர்களும் 6054 பிள்ளைகளும் இதில் இணைந்துள்ளார்கள். இப்பணியகம் செயற்பாட்டுடன் கூடிய கல்வியைப் புகுத்த வேண்டும் என்கின்ற நோக்குடன் ஆசிரியர் வழிகாட்டல் கைநூல்களை வெளியிட்டு அதன் செயற்பாடகளுக்கு ஆசிரியர்களுக்கு பயிற்சியும் கொடுத்து வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் சிங்கள பாடசாலைகள் அனைத்திலும் இச்செயல்திட்டம் 2014 ஜனவரி மாதத்திலிருந்து எல்லாப் பாடசாலைகளிலும் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.