மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழா

(க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்புவிழா இன்று வெள்ளிக்கிழமை (27.10.2017) காலை 10.00 மணியளவில் அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் காட்மண்ட் மண்டபத்தில் நடைபெற்றது.

முதலில் அதிதிகளை மலர்மாலை அணிவித்து பேண்ட் இசைவாத்தியங்கள் இசைத்து வின்சன்ட் உயர்தரப்பாடசாலை முன்பாக இருந்து மெதடிஸ்த மத்திய கல்லூரி வரையும் வரவேற்பளிக்கப்பட்டது.தேசியகொடியை ஆளுநர் ரோஹித போகல்லாகம அவர்களும், பாடசாலைக்கொடியை அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் அவர்களும் ஏற்றிவைத்தார்கள். இதன்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம அவர்களும்,கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் செயலாளர் ஜே.எஸ்.டீ.எம்.அசங்க அபேவர்த்தன,கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டவூள்யு.ஜீ.திசாநாயக்க, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன்,
விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் வலயக்கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன், பாடசாலை வேலைத்தள மாவட்ட பொறியியலாளர் ஏ.எம்.எம் ஹஹீம் ஆகியோர்களுடன், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் எம்.கணேசராசா, மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ரீ.அருட்பிரகாசம், பழைய மாணவச்சங்கத் தலைவர் எஸ்.சசிதரன், பழைய மாணவசங்கத்தின்  உபதலைவர்களான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய அதிகாரியும் பழைய மாணவருமான நவரெட்ணம்-மௌலீசன், பழைய மாணவ சங்கத்தின் உபதலைவர் எஸ்.கலைச்செல்வன், பொறியியலாளரும் பழைய மாணவ சங்கத் உப-செயலாளருமான என்.திருவட்செல்வம், சென்றலைட் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய பிரதி பொது முகாமையாளருமான வை.கோபிநாத், வின்சன்ட் உயர்தர தேசிய பெண்கள் பாடசாலையின் முதல்வர் திருமதி.இராஜகுமாரி கனகசிங்கம், பிரதி அதிபர்களான இராசதுரை-பாஸ்கர், கே.சசிகாந், உப- அதிபர்களான எஸ்.சதீஸ்வரன், எஸ்.லோகராசா, பாடசாலை அபிவிருத்தி சங்கப்பிரதிநிதிகள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.

அதன்பின்பு மங்கள விளக்கேற்றல், மும்மதப் பிராத்தனை, வரவேற்புரை,தலைமையுரை, அதிதிகள் உரை, பரிசளிப்பு என்பன இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம அவர்களை அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் பொன்னாடை போர்த்தி கௌரவிக்க பழைய மாணவ சங்கத்தின் தலைவர் எஸ்.சசிதரன் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தார்கள்.

இந்த பரிசளிப்பு விழாவில் 300 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டு பரிசுகளும், சான்றீதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது. ஆசிரியர் திருமதி.வளர்மதி நடராஜா அவர்களின் நன்றியுரையுடன் பரிசளிப்புவிழா இனிது நடைபெற்றது.