ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வாழ்வாதார உதவிக்கான ஆடுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு  19.04.2018 ஆம் திகதி கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குடும்பிமலை பிரதேசத்தில் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட  செயற்பாட்டாளர் ஜெ.நிவேக் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது கிரான் குடும்பிமலை பிரதேசத்தில் கடந்த கால போரினால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற தெரிவு செய்யப்பட்ட குடும்பத்தின் வாழ்வாதார மேம்பாடுக்காக 1 லட்சம் ரூபா பெறுமதியான ஆடுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வாழ்வாதார செயற்பாடுகள் தொடர்பாக பயன் பெறும் பயணாளியான ஆறுமுகம் பரமானந்தன் ஜேர்மன் வாழ் உதயம் நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் நன்றிகள் தெரிவித்துக்கொண்டமை  குறிப்பிடத்தக்கது.