விவசாய அமைச்சினால் துறைநீலாவணையில் கிராமிய குளங்கள் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்


(வேணு)
கிழக்கு மாகாணத்தில் விவசாய அமைச்சினால் ஆயிரம் குளங்கள் ஆயிரம் கிராமங்கள் வேலைத்திட்டத்தினூடக கிராமிய குளங்கள் புனரமைப்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் வரும் சின்ன வன்னியனார் வெளிக் கண்ட பிரிவுக்குட்ப்பட்ட போடியார் குளத்திற்கான புனரமைப்பு சிரமதானப் பணிகள் நேற்று களுவாஞ்சிக்குடி கமநல அபிவிருத்தி திணைக்கள பெரும்போக உத்தியோகத்தர் மொகமட் ஜாசில் தலைமையில் துறைநீலாவனையில் இடம் பெற்றது. 

கடந்த பல வருடங்களாக அப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாட்கள் தேவையாகவிருந்த இவ் குளப்புனரமைப்பு பணிகளுக்காக விவசாய அமைச்சினால 5 மில்லியன் ருபா செலவிடப்படவுள்ளன.

இவ் சின்ன வன்னியனார் போடியார் குளத்தின் சிரமதான நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் நடராஜா சிவலிங்கம் கலந்து கொண்டு பணிகளை ஆரம்பித்து வைத்தார். இக்குளமானது துப்பர வாக்கப்படுவதன் மூலம் இப் பகுதியிலுள்ள 100க்கணக்கான விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நன்மையடைவுள்ளனர். 

இவ் குளத்திற்கான புனரமைப்பு சிரமதானப்பணி நிகழ்விற்கு மட்டக்களப்பு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் களுவாஞ்சிக்குடி கமநல அபிவிருத்தி திணைக்கள ஊழியர்கள் இப் பகுதிவிவசாய அமைப்பு பிரதிநிதிகள் விவசாயிகள் பொதுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.