ஆயுர்வேத வைத்தியசாலையில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களின் சேவைகளை பாராட்டி பரிசுப் பொதிகள் வழங்கி வைப்புபைஷல் இஸ்மாயில்

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களின் சேவைகளை பாராட்டி கௌரவித்து பரிசுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு (18) அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும் ஆயர்வேத வைத்திய நிபுணருமான கே.எம்.அஸ்லம் தலைமையில் வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இதன்போது இடமாற்றம் பெற்றுச் சென்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் யு.கே.சம்சுதீனுக்கு பொண்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு ஞாபகச் சின்னம் மற்றும் பரிசுப் பொதி போன்றவற்றை வைத்தியர் குழாமினரால் வழங்கி வைக்கப்படுவதையும், வைத்தியப் பொறுப்பதிகாரி கே.எம்.அஸ்லம் மற்றும் பரிசாரகர் ஏ.ஆர்.எம்.றிம்ஸான் ஆகியோர்கள் அவரின் சேவை தொடர்பில் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.