அம்பாரை நகரில் ரி.என் சரவணபவன் அதி விஷேட சைவ உணவகம் திறந்து வைப்பு.


(சா.நடனசபேசன்)
அம்பாரை நகரில் ரி.வி. சரவணபவன்  அதி விஷேட சைவ உணவகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் உயர்தர உணவுகளைக் கொண்டு இயங்கி வரும் சரவணபவன் உணவகத்தின் கிளை 11 ஆம் திகதி திங்கட்கிழமை அம்பாரை நகரில் பிரபல சமூகசேவகர் தொழில் அதிபர் க.துரைநாயகம் அவர்களது தலைமையில் உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில்  இந்து,பௌத்த மதகுருமார் மற்றும் பிரான்ஸ் நாட்டில் இருந்து வருகைதந்த எஸ்.சுரேஸ், சுவிஸ் நாட்டில் வசிக்கும் பி.எம்பி. நகையத்தின்  உரிமையாளர் மோகன், சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணக் கிளையின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் உட்பட பலர் கலந்துசிறப்பித்தனர்
அம்பாரை மாவட்டத்தில் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் நல்ல உறவைப் பேண வேண்டும் என்பதற்காக தொழில் அதிபர்; வந்துல அவர்களது அயராத முயற்சியாலேயே இவ் உணவகம் திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.