சேனா படைப்புழுவின் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது
நாட்டின் பிரதான விவசாயப் பயிர்கள் மீதான சேனா படைப்புழுவின் தாக்கம் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, சோளப் பயிர்செய்கை நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கான அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக விவசாய, கிராமிய பொருளாதாரம், பண்ணை வள அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்தார்.

எனினும் இந்த படைப்புழுவின் தாக்கம் முழுமையாக கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. சில பிரதேசங்களில் இவை பரவியிருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. எவ்வாறெனினும் கடந்த இரண்டு மாதங்களில் கிடைத்த அனுவங்களினூடாக எதிர்வரும் காலங்களில் சேனா படைப்புழுவை முழுமையாக ஒழிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.