செங்கலடி விஸ்டம் கல்வி நிலையத்தில் இரு நூல்கள் வெளியீட்டு விழா




செங்கலடி நிருபர்.

மட்டக்களப்பு செங்கலடியில் அமைந்துள்ள விஸ்டம் கல்லூரியில் இணைப்பாளர் வீ.தவநீதன தலைமையில் இரு நூல்கள் புதன்கிழமை(13) வெளியிடப்பட்டன. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உயர்தர மாணவர்களுக்கு ஏற்றவகையில் இந் நூல்கள் ஆக்கப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் முதலாவதாக 'விஞ்ஞான முறையியலாளர்கள்' எனும் நூலானது மட்.மம.ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் அளவையில் மற்றும் விஞ்ஞானமுறை கற்பிக்கும் ஆசிரியர் ந.ஹாணுகிருஸ்ணா அவர்களினால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது. இந் நூலின் முதல் பிரதியை மட்.செங்கலடி மத்திய கல்லூரியில் பிரதி அதிபர் திருமதி.கலாவள்ளி சௌந்தர்ராஜா பெற்றுக்கொண்டார். இந் நூலுக்கான ஆசியுரையை செங்கலடி மத்திய கல்லூரியின் அதிபர் கு.அருணாச்சலம் அவர்கள் வழங்கியிருந்தார்கள் இந் நூலிற்கான அணிந்துரையை கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடாதிபதியும் மெய்யியல் மற்றும் விழுமிய கற்கைத்துறைத் தலைவருமான சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.மு.ரவி அவர்கள் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது நூலான இந்து நாகரீகம் இந்து சமயம் 2020 எனும் வினாவிடைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. இந் நூலை எஸ்.எஸ்.நிமல் ஆசிரியர் எழுதியிருந்தார் இந் நூலின் முதல் பிரதியை தென் கிழக்கு பல்கலைக்கழக இந்துநாகரீக விரவுரையாளர் ந.சுபராஜ் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள் இவரே இந் நூலுக்கு வாழ்த்துச் செய்தியும் வழங்கியிருந்தார். 

இந் நூல் வெளியீட்டு விழாவில் ஸ்ரீ மதுமலர்கா வீரபத்திரர் நுவாமி ஆலய தலைவர் மா.முத்துலிங்கம் மட்ஃசித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய பிரதி அதிபர் எஸ்.சிறிதரன் செங்கலடி குமாரவேலியார் கிராம செல்வவிநாயகர் ஆலயத்தலைவர் சோ.விஜயநாதன் ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் ஆசிரியர் ப.ஏகலிங்கம்  கவிஞர் க.நாகேந்திரன் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள்  உயர்தர மாணவரகள் இந் நிகழ்வில் கலந்துகொண்டதுடன் இந் நிகழ்வினை மிகவும் சிறப்பாக தொகுப்பாக்கம் செய்து கோ.தரணிதரன் ஆசிரியர் அவர்கள் வழங்கியிருந்தார்கள்.