சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் 47வது அரச நாடக விருது வழங்கும் விழாவில் பல விருதுகளை பெற்றுள்ளது
47வது 'அரச நாடக விருது வழங்கும் விழா கொழும்பு தாமரைத் தடாகத்தில்   கடந்த 27.03.2019 அன்று இடம்பெற்றது

 சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக, நாடகத்துறை தற்காலிக போதனாசிரியர்கள், நிறுவக பயில் நிலை மாணவர்கள் மற்றும் நிறுவக பழைய மாணவர்கள் பலரின் உழைப்பில் மூன்று நாடகங்கள் பல விருதுகளை பெற்றுள்ளது .அவ்வகையில்

விஷ்ணு ஆனந்தனின்
"அப்பால் பெய்யும் மழை" எனும் குறுநாடகம் முதலாமிடத்தைப்பெற்றதோடு 08 அரச விருதுகளையும் வென்றுள்ளது.

விதுஷாவின்
'அழுக்கனவன்' எனும் குறுநாடகம் 05 அரச விருதுகளைப் பெற்றுள்ளது.

பிரதீப்ராசாவின்
"அனுலாவின் காதல்" எனும் நெடுநாடகம் முதலாமிடத்தைப்பெற்றதோடு 10 அரச விருதுகளை வென்றும் சாதனை படைத்துள்ளன. இந்நாடகங்கள் அனைத்தும் மருதானை எல்பின்ஸ்டன் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பல பத்து வருடங்களுக்குப்பின்னர், தேசிய மட்டத்தில் கிடைத்த மாபெரும் விருதுகள் இவை. வெற்றிகளுக்கும் விருதுகளுக்கும் அப்பால்.. இவை சொல்லவரும் செய்திகளும் அவற்றின் கலைநயமும் அற்புதமானவை.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கேகாலை, களுத்துறை, குருநாகல், இரத்தினபுரி, புத்தளம், கொழும்பைச்சேர்ந்த இளம்நடிகர்களுடைய சங்கமமாய் இவ்வாற்றுகை அமைந்திருந்தது.

ஈழத் தமிழ் நாடக வளர்ச்சியில் நற்தாக்கங்களையும், திருப்புமுனைகளையும் அண்மைக்காலமாக எமது நிறுவனமும், மாணவர்களும் விதைத்துக் கொண்டிருப்பது பெருமைக்குரியதே. அவ்வகையில் இவர்களை வாழ்த்துவதில் நிறுவக மாணவர்களாகிய நாம் பெருமை கொள்கின்றோம்.

மாணவர் ஒன்றியம்
சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம்,
கிழக்குப் பல்கலைக்கழகம்.